Tuesday, 26 January 2016

2016 - குடியரசு தின சமர்ப்பணம்


இளைஞர் சக்தி
                                                                            -  நிலவளம் கதிரவன்

இன்றைய உலகமயமாதலில் உலகம் உள்ளங்கையளவு. புதிய பொருளாதாரக் கொள்கையின் தாக்கத்தால் நுகர்வுக் கலாச்சாரம் நமது இளைஞர்களிடையே பல்கிப் பெருகியுள்ளதில் வியப்பேதுமில்லைநல்லதுமாற்றம் ஓன்றுதானே மாறாதது
                   
                ஆடம்பரமும், மேற்கத்தியக் கலாச்சாரமும் வியாபித்துள்ள இன்றைய சூழலில், நமது பாரத பண்பாட்டையும், தமிழர் கலாச்சாரத்தையும் பின்பற்றப்பட வேண்டியது நமது கடமையாகும்இளைஞர்களே இந்தியாவின் தூண்கள்இளைஞர் வளமே தேசத்தின் அடித்தளம்நமது பாரதத்தின் பலமே ஏனைய தேசங்களைவிட இளைஞர்களின் பலம் மிக்க தேசமாக இருப்பதுதான்இயற்கை வளங்களும், ஆன்மிக வளங்களும் நிரம்பிய நமது தேசத்தில், மனித வளங்களுள் மிக முக்கியமான இளைஞர் வளங்களை பெற்றிருப்பதே  மற்ற தேசத்தாருக்கு வியப்பையும், அச்சத்தையும் ஏற்படுத்துகிறதுகாரணம் நமது  பாரதத்தின் மேனாள் குடியரசுத் தலைவர் அமரர் அ.பெ.ஜெ.அப்துல்கலாமின் கனவான 2020ல் வல்லரசு என்கிற சாதனை இத்தகைய இளைஞர்களின் வழியே சாத்தியம் என்பதுதான்.                                  

                 இளைஞர் வளங்கள் உருவாவதில் உடல் நலனும், செயல்பாடும், சமூக தாக்கங்களும் பெரும் பங்கு வகிக்கிறதுஉடல் நலனைப் பொருத்த அளவில் நமது இந்திய இளம் பருவத்தினரில் அதாவது 11 முதல் 19 வரையிலானவர்களில் 47% உடல் எடை குறைபாடும், 25% இரத்த சோகையும், ஊட்டச் சத்து இல்லாததன் தாக்கத்தால் ஏற்பட்டுள்ளதுமேலும் கழிப்பிட வசதி, சுகாதாரம், பால்வினை நோய்கள் பற்றிய புரிதல் போன்றவை மிகவும் குறைவுசமூகத்தை எடுத்துக் கொண்டால் நமது இந்தியாவில் சுமார் 43% பெண் குழந்தைகளுக்கு 18 வயதிற்குள்ளாகவே திருமணம் நடைபெறுகிறதுஅதாவது குழந்தைத் திருமணம்இந்நிலை பாகிஸ்தானில் எவ்வளவோ மேல்காரணம் அங்கு பெண் குழந்தை திருமண விகிதம் 25% அளவில்தான் உள்ளதுகல்வியறிவு பெற்ற இந்தியாவில்தான் இத்தகைய நிலை. இவை அனைத்துமே வளம் பொருந்திய இளைஞர் சக்தியை பெருக்குவதில் உள்ள சவால்களாகும்முதலில் இத்தகைய நிலையைப் போக்க வேண்டும். இந்நிலையைப் போக்கினால்தான் குன்றா வளமும், நீடித்த வளர்ச்சியும் சாத்தியமாகும்

                சரி. இத்தகைய சாத்தியங்களை வயப்படுத்துவதற்கு நாம் என்ன செய்ய வேண்டும்? சாத்தியத்திற்கான ஆரம்பப் புள்ளி ஓவ்வொரு இளைஞனின் மனதில்தான் உள்ளதுநாம் நம்மில் இருந்துதான் தொடங்க வேண்டும்கேளிக்கை, கொண்டாட்டம், என பொழுதைப் போக்குவதை விட்டுவிட்டு, இந்த சமுதாயத்திலிருந்து பெற்றதை, இந்த  சமுதாயத்திற்கு செலவிட வேண்டும் என்ற தீர்மானத்தை ஓவ்வொரு இளைஞனும் ஏற்க வேண்டும். உயர்கல்வி பயின்ற உடன் மேல்நாடுதான் என்ற நிலைமையை மாற்ற வேண்டும். பசுமைப் புரட்சியும், புதிய பொருளாதாரக்  கொள்கைகளும் மக்களின் வாழ்க்கை முறைகளையே மாற்றிவிட்டது. வழமையான பண்பாடுகள் மறைந்துவிட்டனசொல்லப்போனால் வாழ்க்கையின் நிகழ்தகவுகளையே நிர்மூலமாக்கிவிட்டது. எனவே கற்ற கல்வி, பெற்ற அனுபவம், நமது சக்தி என அனைத்தையும் பாரத அன்னைக்கே செலவிட வேண்டும்பிறப்பின் கோட்பாடே மற்றவர்களுக்கு உதவியாக இருப்பதுதான். எண்ணம், சொல், செயலில் தூய்மை இருந்தால்தான் இச்சமூகம் சீர்பெறும். உனக்காக எதை விரும்புகிறோயோ அதையே மற்றவர்களுக்கும் விரும்பு என்பது நபிகள்நாயகத்தின் கூற்றாகும். அதுபோல சிந்தனை ஓன்று, செயல் வேறாக இல்லாமல் நல்ல சிந்தனை, நேர்மையான பாதை, வளமிக்க சமுதாயம் என்ற இலக்கை நோக்கியே ஓவ்வொரு இளைஞனின் பயணம் அமைய வேண்டும்.                               


                நல்லதையே சிந்திப்போம். வளைந்து கொடுக்க கற்றுக்கொள்வோம். கனவு காண்போம். கனவு காண்பது ஓன்றும் தவறானது அல்ல. ஏனெனில் பல அறிஞர்கள் கனவு கண்டுள்ளனர். அக் கனவினை சாத்தியமாக்கியும் உள்ளனர்உள்ளமது செம்மையானால் மந்திரம் ஜபிக்க வேண்டாம் என்பதற்கேற்ப நமது மனதினை அடக்கி, ஆசைகளை சீராக்கி, அர்ப்பணிப்புடன் கூடிய செயல்பாடும் அமைந்தால் நமது தேசம் ஓளிரும்.

(  தேசிய இளைஞர் தினத்தை முன்னிட்டு இளம் குரல் மாத இதழில் - ஜனவரி-2016 - )

1 comment:

வினைகள் தீர்க்கும் விநாயகர் சதுர்த்தி

  வினைகள் தீர்க்கும் விநாயகர் சதுர்த்தி -     நிலவளம் கு . கதிரவன் .,        இந்து மதத்தில் பல்வேறு கடவுளர்களும் , அக் கடவுள்களுக்கு எண்ணற்ற...